MOTOROLA SCHOLAR PROGRAM : 2011-12   Leave a comment

Dear All,

MOTOROLA SCHOLAR PROGRAM : 2011-12
Website : www.faer.ac.in

FAER announces the Motorola Scholar program to select scholars from engineering colleges based on a project work in the areas of

1) Computer Science and IT

2) Communications

3) Renewable Energy Systems

4) resources

5) Rural technologies

6) Health care Technologies

7) Labour saving Technologies for Women

8) Ecology and Environment 9) Applications.

Selections will be done by Foundation for Advancement for Education and Research (FAER). It consists of two stages.

Stage 1 : FAER will receive project proposals from students in engineering colleges, screen them with the help of experts and select projects for
funding. An amount to a maximum of Rs. 5000/- will be reimbursed to the project team after their completion of the project.

Stage 2 : Selection of “Motorola Scholars” based on the evaluation of the completed projects through a Seminar-cum-Exhibition and best projects will be awarded with Cash Prize and Certificates in Motorola Scholar Awards Presentation Function.

There will be a special award for students from disadvantaged sections.

Last date for receipt of hardcopy of the proposals for projects : 15th December 2011

Project Approvals by FAER : 16th February 2012

Prizes:

First Prize : Rs. 1,00,000/-
Second Prize : Rs. 75,000/-
Third Prize : Rs. 50,000/-
Special Award : Rs. 25,000/-

Bonafide students doing B.E. / M.C.A. courses in final year are eligible to participate in this contest. Students should be studying in a
recognized college / institute / university.

For further details, format for submitting project proposals please visit FAER website.

Foundation for Advancement of Education and Research
G5, Swiss Complex, 33, Race Course Road, Bangalore- 560001
E-mail: office@faer.ac.in , Website: www.faer.ac.in

Best Wishes!

India @ e-governance   Leave a comment

Indian Government totally online


All Indian government office related links are available.  Kindly save it.

Obtain:

*   Birth Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=1>
*   Caste Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=4>
*   Tribe Certificate <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=8>
*   Domicile Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=5>
*   Driving Licence <
http://www.india. gov.in/howdo/ howdoi..php? service=6>
*   Marriage Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=3>
*   Death Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=2>
*   Search More – How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Apply for:

*   PAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=15>
*   TAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=3>
*   Ration Card <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=7>
*   Passport <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=2>
*   Inclusion of name in the Electoral Rolls <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=10>
*   Search More – How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Register:

*   Land/Property <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=9>
*   Vehicle <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=13>
*   With State Employment Exchange <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=12>
*   As Employer <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=17>
*   Company <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=19>
*   .IN Domain <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=18>
*   
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=25>
*   Search More – How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Check/Track:

*   Waiting list status for Central Government Housing <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=9>
*   Status of Stolen Vehicles <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=1>
*   Land Records <
http://www.india. gov.in/landrecor ds/index. php>
*   Causelist of Indian Courts <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=7>
*   Court Judgements (JUDIS ) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=24>
*   Daily Court Orders/Case Status <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=21>
*   Acts of Indian Parliament <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=13>
*   Exam Results <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=16>
*   Speed Post Status <
http://www.india. gov..in/howdo/ otherservice_ details.php? service=10>
*   Agricultural Market Prices Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=6>
*   Search More – How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Book/File/Lodge:

*   Train Tickets Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=5>
*   Air Tickets Online <
http://www.india. gov..in/howdo/ otherservice_ details.php? service=4>
*   Income Tax Returns <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=12>
*   Complaint with Central Vigilance Commission (CVC) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=14>
*   Search More – How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Contribute to:

*   Prime Minister’s Relief Fund <
http://www..india. gov.in/howdo/ otherservice_ details.php? service=11>
*   Search More – How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Others:

*   Send Letters Electronically <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=20>
*   Search More – How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Recently Added Online Services

*   Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2691>
*   Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2693>
*   Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2694>
*   Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2695>
*   Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2697>
*   Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2698>
*   Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2699>
*   Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2702>
*   Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2700>
*   Andhra Pradesh: Online Motor Driving School Information <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2705>   
Global Navigation 

*   Citizens <
http://www.india. gov.in/citizen. php>
*   Business (External website that opens in a new window) <
http://business. gov.in/>
*   Overseas <
http://www.india. gov.in/overseas. php>
*   Government <
http://www.india. gov.in/govt. php>
*   Know India <
http://www.india. gov.in/knowindia .php>
*   Sectors <
http://www.india. gov.in/sector. php>
*   Directories <
http://www.india. gov.in/directori es.php>
*   Documents <
http://www.india. gov.in/documents .php>
*   Forms <
http://www.india. gov.in/forms/ forms.php>
*   Acts <
http://www.india. gov.in/govt/ acts.php>
*   Rules <
http://www.india. gov.in/govt/ rules.php>
*   Schemes <
http://www.india. gov.in/govt/ schemes.php>
*   Tenders <
http://www.india. gov.in/tenders. php>
*   Home <
http://www.india. gov.in/default. php>
*   About the Portal <
http://www.india. gov.in/aboutthep ortal.php>
*   Site Map <
http://www.india. gov.in/sitemap. php>
*   Link to Us <
http://www.india. gov.in/linktous. php>
*   Suggest to a Friend <
http://www.india. gov.in/suggest/ suggest.php>
*   Help <
http://www.india. gov.in/help. php>
*   Terms of Use <
http://www.india. gov.in/termscond tions.php>
*   Feedback <
http://www.india. gov.in/feedback. php>
*   Contact Us <
http://www.india. gov.in/contactus .php>
*   Accessibility Statement <
http://www.india. gov.in/accessibi litystatement. php>

Save Paper Save Tree   Leave a comment

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன்   Leave a comment

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன் – கதற வைக்கும் கலப்படம்! சோர்வைப் போக்குவதற்கு நாம் நம்பிக் குடிக்கிற டீயே நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கிற அநியாயம், அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது போலிருக்கிறது. தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான கிலோ அளவில் சிக்கும் கலப்பட டீத்தூள் ரகங்கள் விடுக்கிற எச்சரிக்கை இதுதான். மரத்தூள், புளியங்கொட்டை, குதிரைச்சாணம், இலவம்பஞ்சு விதை என காலத்துக்கும் தொழில் நுட்ப வசதிக்கும் தகுந்தபடி கை வைக்கிற கலப்படக்காரர்களின் தற்போதைய முதலீடு முந்திரிக்கொட்டையின் மேற்புறத்தோல். “பழுப்புநிறத்தில் உள்ள அந்தத் தோலை வறுத்து, பொடியாக்கி, டீயில் கலந்து விட்டால், குறைந்த அளவு விற்பனையில் அதிக லாபம் பார்க்கலாம். குடிக்கிறப்போது டீ அடர்த்தியாகவும் இருக்கும். பச்சையாக இருக்கும்போது சாப்பிட்டால், நம் வாயை புண்ணாக்கி விடும் முந்திரிக்கொட்டைத் தோல் நன்றாகக் காய்ந்த பிறகும் உடலுக்கு பாதிப்பைத்தானே ஏற்படுத்தும்?” என்று கேட்கிறார், “கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’வின் நிறுவனர் தேசிகன்.

தேயிலையில் உள்ள இரண்டு இலை, ஒரு மொட்டு மட்டும்தான் டீத்தூளாக பயன்படுத்தப்பட முடியும். ஆனால் இதுவரை கழிவாக ஒதுக்கப்பட்ட காம்பு, தழை போன்ற ஃபைபர் சமாச்சாரங்களையும் டீயில் தற்போது கலக்கிறார்களாம். டீத்தூளின் எடையைக் கூட்டத்தான் இந்த டெக்னிக். இன்னொரு பக்கம் டார் டாராசைன், அட்ராசைன், கார்மோசைன், சன்செட் யெல்லோ என நீள்கிறது. டீயின் கலருக்காக கலக்கப்படுகிற கெமிக்கல்களின் பட்டியல். “”இந்த மோசடிக்கு ஒரு வகையில் நுகர்வோர்தான் காரணம். டீ என்றாலே செம்மண் கலர்ல, “ஸ்ட்ராங்’ ஆக இருக்கும் என்கின்ற மக்களின் தவறான நம்பிக்கையத்தான் கலப்படக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க” என்று எச்சரிக்கிறார், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராஜராமன். I.S.O தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் முதல் லோக்கல் பார்ட்டிகள் வரை இந்த கலப்படத்தை, அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப செய்து வருகின்றனர். சரி, இந்தக் கலப்பட டீத்தூள் என்ன செய்யும்? இதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் சுந்தர் தருகிற பதில், “”டீயில் கலக்கப்படுகிற கலர்கள் முதலில் கிட்னியைப் பாதிக்கும். பிறகு வயிற்றுப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கலப்பட டீயை அளவுக்கு மீறி குடிச்சா, கேன்சர் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. துணிக்குப் போடற சாயம் கலந்த டீ என்றால் இன்னும் அபாயம்!” டீக்கடைகளைப் பார்த்தாலே நுழைந்து விடுகிற தேநீர்ப் பிரியர்களே உஷார்! -

-சந்திரமோகன்.                                              Chandramohan,
                                                                          +91 9952531858.
                                                                          +91 8106375296.

அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???   1 comment

 

ஏறக்குறைய மூன்று வாரங்களாகிவிட்டது தமிழகத்தில் புரச்சி ஏற்பட்டு. தமிழகம் தலைகீழாக மாறிவிட்டதா..தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டதா..தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிவிட்டதா, என்ற கேள்விகள் அவசரக்குடுக்கைத்தனமாக இருந்தாலும், அதற்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தவிர்க்கமுடியாத மற்றும் நியாயமான கேள்வி. உண்மையிலேயே ஏதாவது அறிகுறி தென்படுகிறதா என்று கேட்டால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சமச்சீர் கல்வி பற்றி பரிசீலிப்போம் என்று கல்விஅமைச்சர் பதவியேற்ற முதல்வாரத்தில் சொல்லியபோது, “ஆஹா..திருந்திட்டாயிங்க போலிருக்கு” என்று சொல்லியவர்கள் வாயில் வண்டி, வண்டியாக மண் அள்ளி போட்டிருக்கிறது தமிழக அரசு. “அதெப்படி..இது கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டமாச்சே, அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். கலைஞர் ஆட்சியில் கொடுத்ததாக சொல்லப்பட்ட புளுத்த அரிசி, அம்மா ஆட்சியில் தங்கமாக ஜொலிப்பதன் காரணம் மட்டும் இன்னும் புரியவில்லை..நடப்பது அம்மா ஆட்சியல்லவா. தொட்டதெல்லாம் தங்கமாகும்.

“நான் ஆட்சியமைத்த அடுத்தநாளே, செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக கேள்விப்படிகிறேன்” என்று முதல்வர் பெருமிதபுன்னகையோடு சொல்லி வாய்மூடுவதற்குள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பழகருப்பையா மனைவியின் கழுத்தில் உள்ள செயினை யாரோ அறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆந்திராவுக்கு ஓடுறதுதான் ஓடுறோம், கடைசி, கடைசின்னு ஒரு செயினை அறுத்துட்டு ஓடுவோமே என்று திருடன் இதை செய்திருக்கிறான், என்ற புரிந்துணர்வு உங்களுக்கு வந்துவிட்டாலே போதும், நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கிறீர்கள் என்னும் பெருமிதம் அடையலாம்..

“பார்த்தியா..அம்மாதான் வருவாருன்னு கரெக்டா கணிச்சேன் பார்த்தியா” என்று பல ஜோசியர்கள் அம்மாவின் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. திங்கள் கிழமைக்கு அடுத்து செவ்வாய்கிழமை என்று கரெக்டாக கணித்து சொல்லி, நீங்களும் ஜோசியர் ஆகலாம் என்பதால், இந்த குற்றச்சாட்டை எளிதாக புறம்தள்ளிவிடமுடியும்.

ஆனாலும் அம்மா ஆட்சியில் சில ஆறுதல்கள் உண்டு. செல்லும் வழியெங்கும் ட்ராபிக் நிறுத்தியதாக கேள்விப்படவில்லை. இதுவே சென்னைவாசிகளுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். அடுத்து “தங்கதாரகையே..தைரியலட்சுமியே, பாசத்தலைவனே” என்று யார் பதவிக்கு வந்தாலும் பேசும் நாக்குகளுக்கும், ஒரு தடா..முதல்வர் எந்த பாராட்டுவிழாவிலும் கலந்துகொள்ளபோவதில்லையாம்..முதல்வர் ஆரம்பித்த இலவச அரிசி வழங்கும் திட்டம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டதும் இன்னொரு அதிர்ச்சி..

“தமிழக அரசு சரியான நேர்கோட்டில் செல்கிறது” என்று விஜய்காந்த் கூறியதில் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை. அப்படித்தானே பேசவேண்டும், அடுத்த மூன்று வருடங்களுக்கு. வழக்கம்போல கலைஞரும் “உடன்பிறப்பே” என்று கடிதம் எழுதுவிட்டு கனிமொழிக்காக தில்லி சென்றிருக்கிறார். இனிமேலும் எதற்கு மத்திய அரசில் பங்கு வகிக்கவேண்டும் என்று நியாயமான கேள்வி எழுப்பினால் உங்களைப்போல முட்டாள் யாருமே இல்லை. மீதி இருக்கும் அமைச்சர்களை எப்படி காப்பாற்றுவது. ஆனாலும் கலைஞர் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றே சொல்லுவேன். நாலு வருடம் அறிவாலயத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, கடைசிவருடம், “தமிழக அரசின் அராஜகங்கள் பாரீர்” என்று அவ்வப்போது குரல்கொடுத்தால் போதும், அடுத்த ஆட்சி கலைஞர் கையில். அட,குரல்கூட கொடுக்கவேண்டாம், அமைதியாக இருந்தாலே போதும், கண்டிப்பாக அடுத்து திமுக ஆட்சிதான். ஏனென்றால், 5 வருட காண்டிராக்ட் முடிந்து தமிழக மக்கள் நியதிப்படி, அடுத்த காண்டிராக்ட் அவர்தானே எடுக்கவேண்டும்

எண்ணைய்சட்டி போல் இருக்கிறது, தண்ணி டாங்கு போல இருக்கிறது என்று காரணம் காட்டி, பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய தலைமைச்செயலகத்திற்கு என்ன கதி என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகஅரசின் கொள்கைவிளக்க துறை என்று ஆரம்பித்து, அனைத்து அலுவலர்களும் பச்சை நிற உடை அணிந்து, அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் நிலை வந்தாலும் ஆச்சர்யபடுவதில்லை. கடற்கரையோரம் சிலம்பை நீட்டிக்கொண்டு நிற்கும் கண்ணகிக்கும் இப்பவே லைட்டா காய்ச்சல் அடிப்பதாக காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன.

அரசுவேலை பார்ப்பதற்கு, கல்லூரி படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற தகுதி போய், நாக்கை வெட்டலாமா, விரலை வெட்டலாமா என்று பலபேர் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்..”நம்ம நாக்கைதான் வெட்டணுமா..புருசன் நாக்கை வெட்டுனா, எங்களுக்கு வேலை தருவாய்ங்களா பாஸ்” என்று மனைவிமார்கள் வாய்ப்பு தேடிகொண்டு இருப்பதும் காற்றுவாக்கில் வந்து கிலியேற்படுத்துகின்றன. மனைவி காய்கறி வெட்டும்போது, கண்டிப்பாக வாய்மூடி இருக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

மொத்தத்தில் மூன்று வார தமிழக ஆட்சி ஓகே என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் “அது வேற வாயி..இது நாற வாயி” என்பது போல், இன்னும் சசிகலா என்னும் பேட்ஸ்மேன் களத்திலேயே இறங்காததால் எதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை..

நடிகர்’ சச்சினுக்கு வரிச் சலுகை -வருமானவரித் துறையின் ‘அபார’ லாஜிக் ..   1 comment

நம் இந்திய நாடே சச்சின் டெண்டுல்கரை ஒரு மகான் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் கடவுளாக அபத்த வழிபாடு செய்துவருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரோ தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல ஒரு நடிகர் அல்லது கலைஞர் என்று கூறி வரிச்சலுகை பெற்றுள்ளார். எதற்கு? தான் கோடி கோடியாக பணம் ஈட்டும் விளம்பர வருவாய்க்குத்தான் அவர் வரிச்சலுகை பெற்றுள்ளார்.

 

இந்தச் சலுகை மூலம் நாட்டிற்கு வருவாய் இழப்பு சுமார் ரூ.5  கோடி ! 

நாளை ஊழல்வாதிகளுக்கெல்லாம் அவர் ஊழல் செய்த பணத்திலிருந்து 50% வரிச்சலுகை அளிக்கப்படும் என்று ஒரு அபத்த அறிவிப்பை நம் அரசு செய்தால், பலர் தானும் ஊழல் செய்பவர்கள்தான் என்று கூறி வரிச்சலுகை பெறுவார்கள் போலும்! நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்காது என்று நாம் எந்த ஒரு அக்கிரமத்தையும் ஒதுக்கி விட முடியாது.

இதற்கு நம் நாட்டின் வருமான வரித்துறையின் இருநபர் ஆணையம் வரிச்சலுகை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது ஒன்றும் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு சிறந்த நகைச்சுவை.

அதாவது சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்களில் தோன்றும்போது கேமரா முன்னாலும் லைட் வெளிச்சம் முன்னாலும் நிற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஒரு ‘மாடல்’ என்ற விதத்தில் அவர் தன் தொழிலுக்கு ஒரு படைப்பு பூர்வமான கற்பனையையும் செலவழிக்கிறாராம், மேலும் கலாபூர்வமான கூறுகளை ஒன்றிணைத்து மானுட புலன்களிலும், உணர்வுகளிலும் தாக்கம் செலுத்தும் அழகியல் மதிப்பு விளம்பர நடிப்புக்கு உள்ளதாம்! இதுதான் அந்தத் தீர்ப்பாயத்தின் வரிச்சலுகைக்கான நகைச்சுவை நியாயம்!

பெப்சி கோலா குடியுங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் கூறும்போது இந்தியர்களின் புலன்களும், உணர்ச்சிகளும் தாக்கம் பெற்று மக்கள் அழகியல் உணர்வில் தத்தளிக்கிறார்கள் போலும்! நம் வருமான வரித்துறையினருக்கு என்னே ஒரு கலை, அழகியல் உணர்வு!
எனவே ஒரு கலைஞராக சச்சின் டெண்டுல்கரை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒரு நடிகருக்கான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. முத்தாய்ப்பாக அந்தத் தீர்ப்பாயம் இவ்வாறு கூறியுள்ளது.

இப்போது இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக் கட்டம், 2ஜி ஸ்பெக்ட்ரம் மகா ஊழல், காமன்வெல்த் கல்மாடி கூட்டணி ஊழல், ஆதர்ஷ் ஊழல், சுவிஸ் வங்கியில் கோடிகோடியாக கொட்டிக் கிடக்கும் கறுப்புப் பணம், ஊழல் பணம் இன்னும் என்னென்னவோ ஊழல், கொள்ளை என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

நாம் உடனே ஒரு வாதம் செய்வோம். நாட்டில் அவனவன் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இதில் சச்சின் டெண்டுல்கருக்கோ, தோனிக்கோ விளம்பர வருவாய்க்கு வரிச்சலுகை அளிப்பதில் என்ன சார் குடி மூழ்கிவிடப்போகிறது? இவர்கள் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுபவர்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பவர்கள் என்றெல்லாம் நம் மத்திய தர வர்க்க அசட்டு உணர்ச்சிகளை பெரிய அறிவு ரீதியான பார்வையாக நாம் முன்வைப்போம்.

இந்த படித்த மத்திய தர வர்க்க ஜீவிகள் எத்தனை பேருக்கு பொருளாதார ஆய்வாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரை தெரியவந்திருக்கும்?தெரியவந்தாலும் ‘இந்தாளுங்களுக்கெல்லாம் இதுதான் வேலை’ ஆக்கபூர்வமாக எதையும் இவர்கள் செய்ய முடியாது, எப்போதும் குறை கண்டே வாழ்பவர்கள்’ என்று கூறி முற்றிலும் ஒதுக்கி விடும் ஒரு அராஜக மனப்போக்கையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்திய நிதிநிலை அறிக்கையின் படி நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய வருமான வரி பாக்கி ரூ.240 கோடி. ஆனால் இதுவரை வசூலிக்க முடியாதவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

005- 06ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய ரூ.3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் வராதா வரியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை விட இரு மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சாய்நாத்.இது தவிர ஆயத்தீர்வை, சுங்கவரிகளில் அரசு விட்டுக் கொடுக்கும் சலுகைகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ.95,765 கோடி.

சுங்கவரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ.1,98,291 கோடி என்று அந்தக் கட்டுரையில் சாய்நாத் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக வராத வரி, வரிச்சலுகை ஆகியவற்றினால் வருவாய் இழப்பு மட்டும் ரூ. 22 லட்சம் கோடி! ஆஹா! ஏழைகளின் நலன்களுக்காக நம் அரசு என்னமாய் உழைத்து வருகிறது!

இந்த வரிச்சலுகையெல்லாம் விலைக்குறைப்பு என்ற அளவில் மக்களுக்காகச் செய்யப்படுவதே என்று பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், கபில் சிபல் ஆகியோர் கூறலாம்.

ஆனால் சச்சின் டெண்டுல்கரை ஒரு ‘கலைஞராக’ அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள விளம்பர வருவாய் வரிச்சலுகைக்கு வருவாய்த்துறை புதிய ‘அழகியல்’ ‘கலை’ மதிப்பையே வழங்கி விட்டது போங்கள். கமல்ஹாசனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கிறதோ இல்லையோ சச்சின் டெண்டுல்கர் தோன்றும் விளம்பர நடிப்பிற்காக நம் வருவாய்த்துறையே சச்சினை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்தாலும் செய்வார்கள்.

இதே போல் நாளை அம்பானி, டாடா, மிட்டல் போன்ற உயர்தர தொழிலதிபர்களும் விளம்பரங்களில் நடித்து கலையை வளர்க்கலாம் அதற்காக அவர்களது தொழிலில் ஈட்டும் லாபத்தின் மீதான வரியையும் கூட ரத்து செய்யலாம்!

இது போன்ற வரிச்சலுகைகளினால் விளையாட்டு எந்த விதத்தில் வளரும் என்பதை அரசுகள் தெரிவிக்கவேண்டும்.

கால்பந்து, ஹாக்கி போன்ற துறைகள் ஊழலிலும், அதிகாரப் போட்டிகளிலும் தனிநபர் அராஜகத்திலும் நசிவுற்று சின்னாபின்னமாகி வரும் சூழ்நிலையில் ஒரு விளையாட்டில் அதிக வருவாய் ஈட்டி பெரும் பணக்காரராக இருந்து வரும் ஒரு சில வீரர்களை பெரிய நாயகர்களாகவும், கடவுளாகவும் உருவாக்கி, வழிபாட்டு மனோநிலையில் சலுகைகளை வழங்கி அதனை ஏதோ கலை வெளிப்பாடு என்று வேறு கூறிக்கொள்ளும் கேவலம் இந்த நாட்டைத் தவிர வேறு எங்காவது நடந்தால் அதனைத் தெரிந்து கொள்ள நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.

சச்சின் டெண்டுல்கரின் நடிப்புக் கலைத்திறமையை நம் வருமான வரி துறையினர் அறுதியிட்டது போல் நாளை ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அணி உரிமையாளர்களான ஷாரூக்கான், விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போன்றோரின் ‘கலா பூர்வமான’ கிரிக்கெட் ரசனைக்காக கிரிக்கெட் சலுகைகளையும் வழங்கலாமே. கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் பிற சலுகைகள், ஊதியம், வரிச்சலுகைகளை வழங்கலாமே! என்ன கெட்டுவிடப்போகிறது!. இவர்கள் கிரிக்கெட்டை ரசிக்கும் விதம் அது பற்றி பேசும் விதம், கொடுக்கும் பேட்டிகள் அவர்களை ஒரு கிரிக்கெட் அழகியல், கலை ரசிகர்களாகவே உருவக்கியுள்ளது. எனவே இவர்களும் கிரிக்கெட் வீரர்களுக்கான சலுகைகளுக்குத் தகுதியானவர்களே என்று கூறவேண்டியதுதானே பாக்கி!

தடகளம், துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகளில் ஒரு தனி நபர் சாதனைக்கோ, அணியின் சாதனைக்கோ பரிசுகள் வழங்குவதும், அந்த சாதனையாளர்களுக்கு ஓரிரு முறை வரிச்சலுகை வழங்குவதும் நியாயமானதே. அது அந்த விளையாட்டில் மேலும் பல இளம் வீரர்கள் நுழைய உதவிபுரியும்.

சச்சின் டெண்டுல்கர், தோனி, யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பணம் கொழிக்கும் வீரர்களுக்கு உலகக் கோப்பை வென்றதற்காக ரூ.5கோடி பரிசு அறிவிப்பது, மாநில அரசுகள் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்குவது என்பதெல்லாம் தேவையற்ற ஆடம்பர நடவடிக்கைகளேஎன்பதுதான் நமது கண்டனம்.

 

அன்புடன் உங்கள் நண்பன்
சந்தோசு செல்வா 

Health Risks of Sitting Down   Leave a comment


Thanks and Regards,
Ramesh.M,
RIM:09362292920,
Madurai-16

முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு ஒரு பகிரங்க கடிதம்….   Leave a comment

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு….., தேர்தலின் போது மட்டுமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு மகேசனாக தெரியும்ஒரு
சாதாரண வாக்காளன் எழுதிக்கொள்வது, நீங்கள் நலமாக இருப்பீர்கள்ஆனால்,
நாங்கள் நலமாக இல்லை….

மூன்றாவது முறையாக முதல்வரானதிற்கு வாழ்த்துக்கள்தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அசுர பலத்துடன் மீண்டும்
இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு உங்களின் ராஜதந்திரமோகூட்டணிபலமோ,
களப்பணியோ காரணமில்லைமுந்தைய ஆட்சியாளர்களின் இமாலயதவறுதான் என்று
நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்.

ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன்
ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல….

இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் 

கெடுப்பார் இல்லாமல் கெடும்.  என்பது  வள்ளுவரின் குறள்.
இடித்து சொல்லவும்எடுத்துசொல்லவும் வாய்ப்பே இல்லாமல் உங்கள்கூட்டணி
கட்சியே எதிர்கட்சியாகவும் மாறிவிட்டது.  (தொடர்ந்து விஜயகாந்த் உங்கள
கூட்டணியில் இருப்பாராவென்று சந்தேகமேகூட்டணியிலிருந்து உங்களால்
விரட்டப்படலாம்அல்லது அவரே விலக நேரிடலாம் ஆனால்அதுவரை….உங்கள்
தவறுகளை எடுத்து சொல்ல யார் இருக்கிறார்கள்?)

பரவாயில்லைஇதுதான்
மக்களின் தீர்ப்பு என்னும் போது விமர்சிக்க யாரால் முடியும்? (ஆனால்,
தோற்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்காமல்
வாக்குப்பதிவு மிசினையும்தேர்தல் ஆணையத்தையும்  குறைசொல்லும்உங்கள்
தைரியம் இங்கு யாருக்குமில்லை என்பதையும் இங்கு சொல்லித்தான்ஆகணும்.
நல்லவேளை உங்கள் கட்சி தோற்ற மற்ற இடங்களில் வாக்குப்பதிவுஎந்திரத்தில்
கோளாறு என்று சொல்லாமல் விட்டீர்களே….அந்த அளவுக்காவது சந்தோஷ
பட்டுக்கொள்ள வேண்டியதுதான்).

பிடிக்காத அரசு  ஊழியர்களை,
காவல்துறையினர்களை பழி வாங்குவதுபந்தாடுவதுபிடிக்காதவர்களைஅடித்து
உதைப்பதுகஞ்சா கேஸ் போடுவதுஎஸ்மாடெஸ்மாபோடா சட்டங்கள்மூலம்
சிறைக்கு அனுப்புவதுமதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது,கோவில்களில் ஆடு,
மாடுகோழி வெட்டக்கூடாது என்று தடைபோடுவது பத்திரிகைகளின்குரல்வளையை
நெறிப்பது போன்ற  கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் ஒருநல்லாட்சியை
தாருங்கள்.

குறிப்பாக சசிகலா  வகையறாக்களை கட்சியிலும்ஆட்சியிலும்
தலையிட விடாமல் தள்ளியே வையுங்கள்உங்களின் கடந்த கால ஆட்சியில்
அவரால்தான் உங்களுக்கு கெட்டபெயர்கலைஞருக்கு அவரின் குடும்பம்என்றால்
உங்களுக்கு சசியின் குடும்பம்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஆட்சியில்
சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவை சபாநாயகர்இருக்கையிலிருந்து எழ
வைத்துவிட்டு அந்த இருக்கையில் சசிகலாவை அமர வைத்து உங்கள் நட்பின்
தீவிரத்தை காட்டிசட்டசபை மரபையே கேலிக்குரியதாக்கினீர்கள்இப்போதும்
அப்படி செய்து விடாதீர்கள்சபாநாயகர் இருக்கையில் சபாநாயகரை மட்டும்அமர
வையுங்கள்.

கலைஞரால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக புதிய
சட்டமன்ற கட்டிடம் பாண்டிச்சேரி போலீசின்  தொப்பி போல இருக்கிறது என்று
கிண்டல் செய்துஇந்த சட்டசபை வளாகத்தில் காலடியே எடுத்து வைக்கமாட்டேன்
என்று சபதமேற்று இப்போது முதல்வரானதும் பழைய கோட்டையிலேயேநுழைகிறீர்கள்.
அதற்கான மராமத்து  பணிக்காக எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்தில்
50 கோடி ரூபாய்களை சிலவிடுகிறீர்கள்.   இப்படி செய்யும் நீங்கள்தான்
கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஜார்ஜ் கோட்டையில் இடவசதிபோதவில்லை
என்று புதிய சட்டமன்றம் கட்ட ராணி மேரி கல்லூரியை தேர்வு செய்து கடும்
எதிர்ப்புக்கு மத்தியில் அதை கைவிட்டீர்இப்போது இதை விட வசதியாக
இருக்கும் சட்டசபையை மறுத்துவிட்டு மீண்டும் கோட்டைக்கே
திரும்பியிருக்கிறீர்கள்நீங்கள் மறுப்பதற்கு கலைஞர் கட்டிய கட்டிடம்
என்ற காரணம் தானே தவிர வேறு என்ன இருக்க முடியும்

யார் வெட்டியகிணறாக
இருந்தால் என்ன தண்ணீர் நன்றாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ள
வேண்டியதுதானே?…   இதை மறுக்கும் நீங்கள்…..இன்று சென்னையில்
பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க காரணமாக விளங்கும்மேம்பாலங்களில்
அதிக மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டதுதான்….அப்படிகலைஞரால்
கட்டப்பட்ட மேம்பாலங்கள் வழியில் நான் பயணிக்க மாட்டேன் என்று
அவற்றையெல்லாம் இடித்து விட்டு புதிதாக கட்டுகிறேன் என்று மக்கள்
வரிப்பணத்தை வீணடித்து விடாதீர்கள்.

அடுத்துமத்திய அரசின்
திட்டங்களாக இருந்தாலும்தமிழ்நாட்டில் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட
108 ஆம்புலன்ஸ்வீட்டுவசதி திட்டம் போன்றவற்றை நீக்கி விடாதீர்கள்.
இன்று பெருமளவு உயிர் சேதத்தை தடுக்க 108 ஆம்புலன்ஸ் பெரிதும்காரணியாக
விளங்குகிறதுகுறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம்ஏழைகளுக்கு
எட்டாக்கனியாக இருந்த மருத்துவ வசதி இந்த திட்டத்தால் தான்
கிடைத்திருக்கிறதுவேண்டுமானால் கலைஞர் காப்பீடு திட்டம் என்பதைஉங்கள்
ஆசான் எம்.ஜி.ஆர்காப்பீடு திட்டம் என்றோஜெயலலிதா காப்பீடு திட்டம்
என்றோஇல்லாவிட்டால் உங்கள் தாயார் பேரில் சந்தியா காப்பீடு திட்டம்
என்றோ பெயரை மாற்றி கொள்ளுங்கள்ஆனால் இந்த திட்டத்தை மட்டும்தயவு
செய்து நீக்கிவிடாதீர்கள்.

அடுத்துஇலவசங்கள்…. மக்கள் விரும்புவது
இலவசங்களை அல்ல….அப்படி இலவசம் தான் முக்கியமென்றால்அதையெல்லாம்
கொடுத்த கலைஞரையே மீண்டும் தேர்வு செய்திருப்பார்கள்ஆனால்அவர்கள்
உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் கொடுப்பேன்
என்று சொன்ன இலவசங்களால் அல்ல….தேர்தல் வாக்குறுதிகளைநிறைவேற்றுவதில்
உங்களை விட கலைஞரே நம்பகத்தன்மை உள்ளவர் என்று எல்லோருக்கும்தெரியும்.
இருந்தாலும் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள்
உங்களிடம் எதிர்பார்ப்பது வேறு ஒன்றைத்தான்அதாவது மக்கள் விரும்புவது
நல்ல வாழ்க்கை தரத்தைதான்மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டால்
அவர்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து அவர்களின் தேவைகளை அவர்களே
பூர்த்தி செய்து கொள்வார்கள்பின்னர் யாரிடமும் எதற்காகவும்
இலவசங்களுக்காக கையேந்த மாட்டார்கள்அதற்காக அவர்களின் வாழ்க்கைதரத்தை
உயர்த்துவதற்கு திட்டம் தீட்டுங்கள்.

அடுத்து மின்சாரம்,  இன்று
மின்தடையால் ஜெனரேட்டர்இன்வர்டர், UPS விற்பவர்களை தவிர மற்றஅனைவரும்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்சிறுதொழில்பெருந்தொழில் என்று
பாரபட்சமில்லாமல் நீக்கமற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்தொழில்
துறையே நலிந்து நசிந்து போய் விட்டதுமின்சாரம் தடையின்றி  கிடைக்க
திட்டமிடுங்கள்இன்று இலவச மின்சாரங்கள் மூலம் பெருமளவு மின்சாரம்
வீணடிக்கப்படுகிறதுஇன்று இலவச மின்சார பயனாளிகளில் பலர் ஏக்கர்
கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள்தான்ஏழைகளுக்கு இலவச மின்சாரம்என்ற
நோக்கமே அடிபட்டு விட்டதுஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல்  சொத்து
வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து என்று அறிவித்து
முறைபடுத்துங்கள்.

அதுபோலஆங்காங்கே கொக்கிகள் போட்டு மின்சாரம்
திருடுபவர்களை பிடித்து கடுமையான தண்டனை தாருங்கள்.

அடுத்து….
மந்திரிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்அது உங்கள் உரிமை
என்றாலும் கூட அப்படி செய்வது  நிர்வாக சிக்கலுக்கு வழிவகுக்கும்ஒருவரை
ஒரு குறிப்பிட்ட துறைக்கு மந்திரியாக நியமிக்கிறீர்கள் என்றால்..அவர்
அந்த துறையை பற்றி தெரிந்து(புரிந்துகொள்ளவே சிலகாலம் எடுக்கும்.
அப்படி அவர் அந்த துறையை பற்றி தெரிந்து கொண்டிருக்கும்போதே அவரை
மாற்றிவிட்டு இன்னொருவரைபின்னர் அவரை மாற்றிவிட்டு வேறொருவரை
நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு ஒரு பயனுமில்லைஇதனால்   உங்கள் கட்சி
MLA-க்கள் அனைவரும் சுழற்சி முறையில் மந்திரியாகிவிடுவார்கள் என்பதை
தவிர…..

இன்னும் நிறைய இருக்கிறது எழுதஆனால் வெளியில் ஆட்டோவரும்
சப்தம் கேட்பதால்  இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.    இறுதியாக ஒன்று,
இந்த முறையாவது நீங்கள் நல்லாட்சி கொடுங்கள்….இல்லாவிட்டால்கலைஞரின்
தவறுகள் மூலம் நோகாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததுபோலஅடுத்தமுறை
தி.மு.வருவதற்கு உங்கள் தவறே காரணமாகிவிடும் என்று கூறி விடை
பெறுகிறேன். இப்படிக்கு  எதிர்பார்ப்புடன்… வாக்காளன்

 

 

Thanks and Regards,
Ramesh.M,
RIM:09362292920,
Madurai-16

பிளாக்கர்ஸ் – கவுண்டமணி செந்தில்   Leave a comment

(கவுண்டமணியும் செந்திலும் பிளாக்கரா இருக்காங்க, கவுண்டமணி ரொம்ப நாளா பிளாக் எழுதாம இருக்காரு, ரொம்ப நாள் ஆச்சேன்னு பிளாக் பக்கம் போய் பார்க்கலாம்னு இரண்டு பேரும் நெட் செண்டருக்கு போறாங்க) கவுண்டமணி :…

(கவுண்டமணியும் செந்திலும் பிளாக்கரா இருக்காங்க, கவுண்டமணி ரொம்ப நாளா பிளாக் எழுதாம இருக்காரு, ரொம்ப நாள் ஆச்சேன்னு பிளாக் பக்கம் போய் பார்க்கலாம்னு இரண்டு பேரும் நெட் செண்டருக்கு போறாங்க)

கவுண்டமணி : அப்பப்பா என்ன வெயில் என்ன வெயில் ஒரே குஷ்ட்டமப்பா, ச்சீ கஷ்ட்டமப்பா, அலோ கடைக்காரரே ஒரு சிஸ்டம் கொடுங்க, பிளாக் படிக்கனும்

செந்தில் : உள்ள ஏசி இருக்குதுங்கலா (கடைக்காரரை பார்த்து)

கவுண்டர் : அடி செருப்பால, நீ கொடுக்கற 20 ரூபாய்க்கு ஏசி வேணுமா? மூடிட்டு வா நாயே, உள்ள போ நாயே
(கம்ப்யூட்டர் முன்னால் இருவரும் அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்கிறார்கள்)

கவுண்டர் : டேய் ஒண்டிபுலி ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன், ஒரு நல்ல பதிவா பார்த்து ஓப்பன் பன்ணுடா, படிக்கலாம்

செந்தில் : அண்ணே என் பிளாக் ஒப்பன் பண்ணுங்கன்னே, நல்ல பதிவா போட்டிருக்கேன்

கவுண்டர் : ஏண்டா நான் நல்லா இருக்கறது உனக்கு புடிக்கலையா,ஏண்டா ஆரம்பத்துலேயே சங்கு ஊதற
(கவுண்டர் ஓப்பன் பண்ணியதும், மெயிலிலும், சாட்டிங்கிலும் நண்பர்கள் வந்து தங்களுடைய பதிவை படிக்குமாரு, ரிக்வெஸ்டும், நியூஸ் லெட்டரும் அனுப்புகிறார்கள்)

கவுண்டர் ; பார்த்தியாடா அண்ணனோட மதிப்பை, எத்தனை பேரு பதிவு எழுதி வச்சுட்டு அண்ணனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பாரு, இப்பயாச்சும் என் மதிப்பு உனக்கு புரிஞ்சுதா, இவங்க பதிவ எல்லாம் கூட படிச்சிரலாம்டா சோசியல் மேட்டரு பண்ணிரலாம், ஆனா கேப்டன பத்தி ஒருத்தன் பதிவ எழுதி வச்சிருக்காண்டா, அத அவனாலயே படிக்க முடியலயாம், என்ன படிக்க சொல்றான், நான் என்ன சாகப்போறேன்னு அவன்கிட்ட சொன்னனா? மவனே அவன்மட்டும் என் கையில கிடைச்சான்…

செந்தில் ; அதவிடுங்கண்ணே, என்னோட பதிவ படிச்சு பாருங்கன்னே, ரொம்ப நல்லா இருக்கும்.

கவுண்டர் : டே நாயே, நான் மறுபடியும் சொல்றேன், ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன், நல்ல பதிவா படிக்கலாம்னு, என்னை கொலகாரனாக்கிராதே

செந்தில் ; அட என்னங்கன்னே, நீங்க நம்பவே மாட்டீங்கறீங்க, நான் நல்ல பதிவாதான் போட்டு இருக்கேன், அதுவும் என்னோட சொந்த அனுபவ பதிவு

கவுண்டர் : சொந்த அனுபவத்த பதிவா போட்டிருக்கியா? அது என்னடா நாயே அனுபவம்?

செந்தில : அதுவான்னே, காலையில எங்கப்பா வடகம் காயப்போட்டுட்டு இருக்கும் போது ரெண்டு வெள்ளைக்காக்கா வந்து வடகத்த தூக்கிட்டு செய்யின்ன்னு பறந்து போயிருச்சுன்னே, அததான் பதிவா போட்டு இருக்கேன்.

கவுண்டர் ; எப்படி பறந்து போச்சு?

செந்தில : சொய்யின்னு…

கவுண்டர் : இப்ப நீயும் அப்படித்தான் பறக்க போற பாரு…

(கவுண்டமணி செந்திலை எட்டி உதைக்கிறார், செந்தில கேபினுக்கு வெளியே போய் விழுகிறார், பக்கத்து கேபினில் உள்ளவர்கள் எட்டி பார்க்கிறார்கள்)

கவுண்டர் ; அப்படியே ஓடி போயிருடா, இந்த பக்கம் மறுபடியும் வந்த கொத்த வச்சு குறுக்காலயே வெட்டி போட்டுடுவேன்

செந்தில் : ஏண்னே உதைச்சீங்க, பக்கத்து கேபின்ல இருந்து ரெண்டு பொண்ணுங்க எட்டி பார்க்குறாங்க, எனக்கு மெசேஜ் பிராப்ளமா இருக்குதுல்ல

கவுண்டர் : என்ன பிராப்ளமா இருக்குது?

செந்தில் : மெசேஜ் பிராப்ளம், அதானே இந்த பசங்க எல்லாம் பொண்ணுங்க முன்னாடி அவமானப்பட்டா சொல்லுவாங்களே, இது கூட தெரியலயா? அய்யோ அய்யோ

கவுண்டர் ; டே நாயே அது இமேஜ் பிராப்ளம்டா, அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டு சேர வைக்கற..

செந்தில் : சரி சரி அதவிடுங்க, என்னோட பதிவ படிங்க (செந்தில் பதிவை ஓப்பன் பண்ணுகிறார்)

கவுண்டர் : இவன் விடமாட்டாண்டா, என்ன சாகடிக்காம விடமாட்டான் போலருக்கு, சரி படிச்சு தொலைக்கிறேன், ஒப்பன் பண்ணி தொலை.

கவுண்டர் படிக்க ஆரம்பிக்கிறார்
இய்ய்ய்ய்
ஆஆஆ
பாதி பதிவை படித்ததுமே
முடியலயே…
கர்ர்ர்ர்ர்

செந்திலை பார்த்து முறைக்கிறார், செந்தில் முழிக்கிறார்..

கவுண்டர் : படிச்சு முடிச்சிட்டண்டா நாயே

செந்தில் : எப்படின்னே இருந்தது?

கவுண்டர் : ம்ம்ம், ரொம்ப கேவலமா இருந்த்து, இதெல்லாம் ஒரு பதிவாடா? டொட்டடோ, டொட்ட்டோ, டொட்ட்டொட்ட்டோங்கற மாதிரி இது ஒரு பதிவு? கர்ர்ர்ர்ர்ர்ர், த்தூதூதூ..

(காறி துப்புகிறார், எச்சில் செந்திலின் மேல் படுகிறது)

செந்தில : (முகத்தை துடைத்தபடி) உங்களுக்கு பொறாமைன்னே, நான் பிரபல பதிவர் ஆயிருவேண்ணு

கவுண்டர் : ஆமா இவரு பெரிய காந்தியடிகள், சத்திய சோதனை புஸ்தகம் எழுதிட்டாரு, நாங்க பொறாமைபடறதுக்கு, போ நாயே

செந்தில் : சரி சரி படிச்சது படிச்சிட்டீங்க, கமெண்டு போட்டுட்டு போங்க

கவுண்டர் : கமெண்டா? எதுக்குடா நாயே?

செந்தில் : ஒரு பதிவ படிச்சா அத பாராட்டி நல்லா இருக்குதுன்னு கமெண்டு போடனும்னே.

கவுண்டர் : நான் எப்படா உன் பதிவு நல்லா இருக்குதுன்னு சொன்னேன்?

செந்தில் : நல்லா இருந்தாலும், நல்லா இல்லாட்டியும் நல்லா இருக்குது, அருமை, சூப்பர், வாழ்த்துக்கள் இப்படின்னு போடனும்னே

கவுண்டர் : முடியாதுடா, நல்லா இருக்குதுன்னு நான் போட மாட்டேன்டா.

செந்தில : அதெல்லாம் முடியாது, நீங்க போட்டே ஆகணும் (கெஞ்சுகிறார்)

கவுண்டர் : சரி, சின்ன பையன் ஆசைப்பட்டுட்ட போய் தொழ, இந்தா நல்லா இருக்குதுன்னு கமெண்ட் போட்டாச்சு

செந்தில் : ஹி ஹி ரொம்ப தேங்க்ஸ்சுங்கன்னே..

கவுண்டர் : ரொம்ப பக்கத்துல மூஞ்சிய காட்டாதடா, பயமா இருக்கு, சரி அப்புறமென்ன, அடுத்த பதிவ ஓப்பன் பண்ணு..

செந்தில் : என்னன்னே அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?

கவுண்டர் : அப்புறம் என்னடா பண்ண சொல்றே? உன் பிளாக்குலயே இருந்து கிடாவெட்டி பூஜை போட்டு சாமி கும்புட சொல்றியா?

செந்தில் ; இல்லனே, இன்னும் நீங்க ஓட்டு போடவே இல்லையே?

கவுண்டர் : ஓட்டா எதுக்குடா?

செந்தில் : அண்ணே பதிவ படிச்சிட்டு கமெண்ட் போட்டா மட்டும் போதாது, ஓட்டும் போடனும்.

கவுண்டர் ; டேய் அண்ணனுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லைடா, டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், சீக்கிரம் அடுத்த பதிவ ஒப்பன் பண்ணு.

செந்தில் ; அதெல்லாம் முடியாதுன்னே, நான் உங்க பதிவு எல்லாத்துக்கும் கமெண்டு ஓட்டு எல்லாம் போட்டிருக்கேன், அதனால நீங்களும் என்னோட பதிவுக்கு போட்டே ஆகணும்

கவுண்டர் : டேய் என்ன கொலகாரனாக்கிராத, எனக்கு நேரமும் இல்ல, உன் பதிவும் புடிக்கல, மரியாதையா விட்டுடு

செந்தில் ; அதெல்லாம் முடியாது நீங்க ஓட்டு போட்டே ஆகணும், இல்லைன்னா நடக்குறதே வேற

(செந்தில் ஆவேசமாகிறார்)

கவுண்டர் : இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ கொந்தளிக்கற, உட்காரு, கோவப்படாத, இப்ப என்ன நான் ஓட்டு போடனும், அவ்வளவுதான, ஓட்டு போடறேன் விடு, சரி இந்த ஓட்டு வாங்கி என்ன பண்ண போற?

செந்தில் ; என்னன்னே இப்படி சொல்லிட்டீங்க, நிறைய ஓட்டு வாங்குனாதான் நம்மோட பதிவு இண்ட்லி, தமிழ்மணம்னு திரட்டியில முண்ணனியில வரும், நமக்கு நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்.

கவுண்டர் : ஹிட்ஸ்ஸா, எது திருப்பாச்சியில நம்ம டாக்டர் தம்பி ஒருத்தன கொல்றதுக்கு யூஸ் பண்ணுவாறே அதா?

செந்தில் : அதில்லைன்ணே, இது வேற, இது பதிவுலக ஹிட்ஸ்

கவுண்டர் : என்ன எழவோ இருந்துட்டு போகட்டும், நானும் ஓட்டு போட்டு தொலைக்கிறேன், இந்த பதிவ படிச்சு எத்தனை பேருக்கு வாந்தி பேதியாக போகுதோ, அதுசரி இந்த ஹிட்ஸ்ஸ வாங்கி என்ன பண்ணப் போற?

செந்தில் : ஒண்ணுமில்லன்னே, சும்மா ஒரு வெளம்பரம்..

கவுண்டர் : வெளம்பரமா? நீ எழுதற ஒண்ணு ரெண்டு மொக்கைக்கு எதுக்கடா இந்த விளம்பரம், அந்த சினிமாக்காரங்கதான் ஆ வூன்னா தனக்குதானே போஸ்டர் ஒட்டி செவுத்த நாறடிக்கறாங்க ஒன்னுமே கிடைக்கலீன்னா பொறந்த நாள் கொண்டாடுரானுங்க, அதுவும் 33 வயசுக்கு மேல போறாங்களான்னா போக மாட்டேங்குறாங்க, 33 லயே நிக்குறானுங்க, நாட்டுல இவனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா? நாம எல்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா?

செந்தில் : இங்க பாருங்க என்ன பத்தி தப்பா பேசுங்க, என்னோட பதிவ பத்தி மட்டும் தப்பா பேசுனீங்க, கடிச்சு வெச்சிடுவேன்

கவுண்டர் : அய்யோ வேண்டாம்டா சாமி, நீ செஞ்சாலும் செய்வ, எங்கடா ஒட்டு போடனும் சொல்லுடா

செந்தில் : பிளாக்குக்கு கீழ பாருங்கன்னே, லைனா இருக்குதுல்ல அதுலதான் ஓட்டு போடனும்

கவுண்டர் : அடங்கொன்னியா, என்னடா இது பழனி படிக்கட்டு மாதிரி இவ்வளவு நீளமா இருக்குது..

செந்தில் : அதாண்ணே, அதுதான் ஓட்டுபட்டை, இண்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ்10 இப்படி எல்லாமே இருக்குது, எல்லாத்துலயும் ஓட்டு போடுங்கன்னே

கவுண்டர் : எல்லாத்துலயுமா, இதுல எல்லாத்துலயும் ஓட்டு போடனும்னா ஒரு மாசம் ஆகும் போலிருக்கே, என்னால அத்தனை எல்லாம் போட முடியாது, இந்தா ஒன்னுல போட்டுட்டேன்

செந்தில் : அதெல்லாம் முடியாது, எல்லாத்துலயும் போடுங்க

கவுண்டர் : முடியாதுங்கறேன்

செந்தில் : ஓட்டு போடுங்க

கவுண்டர் : முடியாதுடா நாயே

செந்தில் : மரியாதையா ஓட்டு போடுங்க, இல்லேன்னா நடக்கறதே வேற

கவுண்டர் : அடி நாயே, போனா போகுதுன்னு பார்த்தா ஓவரா லவுட்ட கொடுக்கறயா (எட்டி உதைக்கிறார்)

செந்தில் பறந்து போய் விழுகிறார்

செந்தில் : அய்யோ அண்ணே தூக்கி விடுங்கன்னே

கவுண்டர் : நாலு வீட்டுல பொறுக்கி திங்கற நாயிக்கு லொல்ல பாரு

செந்தில் : அய்யோ அண்ணே

கவுண்டர் : எகத்தாளத்த பாரு

செந்தில் : அண்ணே எந்திரிக்க முடியலன்னே

கவுண்டர் : லோலாய்தனத்த பாரு

செந்தில் : அண்ணே முடியலன்னே தூக்கி விடுங்கன்னே

கவுண்டர் : போ நாயே அப்படியே உருண்டு போ நாயே, உங்கப்பன் எங்கயாவது நண்டு வறுத்து தின்னுட்டு இருப்பான் அவன்கிட்ட போய் தூக்கி விட சொல்லு, இனிமே என் கண்னுல நீ பட்ட, பர்ஸ்ட் டெட் பாடி நீதாண்டி..!

எண்டோசல்பான் ஆட்கொல்லி ரசாயனத்தை தடை செய்க!   Leave a comment

உலகம் முழுதும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆளைக்கொல்லும் பூச்சிக்கொல்லி ரசாயனமான என்டோசல்பானை இந்தியா மட்டும் தடை செய்ய மறுக்கிறது. மரணங்கள், பாதிப்புகள் போதாதாம் நம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, அழிவின் எண்ணிக்கை ஆயிரம், லட்சம் என்று ஆனால்தான் தடை செய்வாராம் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ்!


நம் பொருளாதார நிபுணர் (!) பிரதமருக்கோ என்டோசல்பானை தடை செய்தால் கார்ப்பரேட் நிறுவனம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற அச்சம் (!)

ஐரோப்பிய யூனியன், ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, மற்ற ஆசிய நாடுகள், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் என்டோசல்பான் தடை செய்யப்பட்டதற்கான காரண காரியங்கள் நம் ஜெய்ராம் ரமேஷுக்குப் போதவில்லை போலும்.

என்டோசல்பானின் விஷத்தன்மையை கணக்கில் கொண்டு அதன் பயன்பாட்டை உலகம் முழுதும் தடை செய்ய ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அரசு நிறுவனமான இந்துஸ்தான் இன்செக்டிசைடு நிறுவனமே இதனை உற்பத்தி செய்து வருவது இந்த நாட்டில்தான் நடைபெறும்! இதன் மனித, விலங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவு எதிரானது என்று 2009ஆம் ஆண்டே ஸ்டாக்ஹோம் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குருதியில் நேரடியாகச் சுரந்து மனிதனின் பாலியல் செயல்பாடு முதல் பல்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாகும் ‘என்டோகிரைன்’ சுரப்பியை என்டோசல்பான் பாழடையச் செய்கிறது என்பது பல்வேறு சோதனைகளில் உறுதி செய்யப்பட்ட அறிவியல் உண்மை.

FILE

ஆனால் இங்கு கேரளாவில் ஏதோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானத்திலிருந்து உணவுப்பொட்டலம் வீசுவது போல் காசர்கோட் பகுதியில் வானத்திலிருந்து முந்திரித் தோட்டங்களின் மீது பாய்ச்சப்பட்டுள்ளது. விஷத்தை மேலேயிருந்து தூவியது கேரள அரசின் பிளாண்டேஷன் கார்ப்பரேஷன்! இது அரசின் கொலைவெறிச் செயல் இல்லாமல் வேறு என்னவாம்?

ஒரு மாநில முதல் அமைச்சரே இதனைத் தடை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கையில், ஜெய்ராம் ரமேஷுக்கு என்னவோ மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அளவில் பெரிதாகத் தேவைப்படுகிறது!

மனித, விலங்கு மறு உற்பத்திக் குறைபாடுகளையும், வளர்ச்சியைப் பாதிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்துவது எண்டோசல்பான் என்பது உலகமறிந்த மருத்துவ உண்மை. மேலும் வேளாண்மையிலும் எண்டோசல்பான் பாதிப்புகளையே அதிகம் ஏற்படுத்துகிறது. பயிர்களை நாசம் செய்யும் சிறு புழு பூச்சிகளை உண்ணும் பூச்சிகளையும் சேர்த்து என்டோசல்பான் அழித்து விடுகிறது. இதனால் உயிரிப்பரவல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விவசாயமே பெரிய அளவில் முடங்கிப் போகிறது.

தற்போது கேரளாவில் சலீம் அலி அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவர் வி.எஸ்.விஜயன் அரசே நடத்திய குற்றம் (State Sponsored Crime) என்று என்டோசல்பான் வான்வழித் தூவலைக் கண்டித்துள்ளார்.

காசர்கோட் பகுதியில் பல குழந்தைகள் வளர்ச்சிக் குன்றி காணப்படுவதற்கு என்டோசல்பானே காரணம் என்பது நீக்கமற நிரூபிக்கப்பட்ட ஒன்று.

மேலும் முந்திரிக்காடுகளுக்கு அருகில் வசிக்கும் பழங்குடி இனமாகிய கோரகா இனம் என்டோசல்பான் பாதிப்பினால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பதையும் மருத்துவர் விஜயன் ஆய்வு செய்யவுள்ளார்.

முந்திரியை உட்கொண்டுதான் நம் நாட்டில் ஏழை ஜனங்கள் உயிர் வாழ்கின்றனரா என்ன? ஏற்றுமதிக்காக முந்திரிகள் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த நாடுகளில்தான் முந்திரிப் பயன்பாடுகள் அதிகமுள்ளது. ஏற்றுமதி சார்ந்த கொள்கையை வைத்திருக்கும் நம் அரசு, ஆட்கொல்லி பூச்சிமருந்துகள் பற்றியும் ஆட்கொல்லி ரசாயனங்கள் பற்றியும் என்ன கொள்கை வைத்துள்ளது? ஒரு கொள்கையும் அல்ல என்பதுதான் நாம் ஜீரணிக்க முடியாத உண்மை.

என்டோசல்பான் தெளித்தவுடன் அதற்கே உரிய ரசாயன நடைமுறையில் என்டோசல்பான் சல்பேட்டாக உருமாறுகிறது. இதன் நச்சுத் தன்மையின் காலம் 9 மாதங்கள் முதல் 6 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என்பதும் அறிவியல் உண்மை. இந்த உண்மைகள் சுற்றுச்சூழல், மற்றும் மானிட ஆர்வலர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டதே.

மேலும் ஒரு இடத்தில் தெளிக்கப்படும் என்டோசல்பானின் விளைவு அந்தப் பகுதியை மட்டும் சார்ந்ததல்ல. பயன்படுத்தப்பட்ட இடத்திலிருந்து அது பல மைல் தூரம் பரவக்கூடியது. அமெரிக்காவில் பல நீர் நிலைகளையும், பல பகுதிகளில் காற்றையும் என்டோசல்பான் மாசுபடுத்தியதாக 2008ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று கூறுகிறது. மீன்களையும் அழித்துள்ளது. அதாவது இவையெல்லாம் பூச்சி மருந்து தெளித்தப் பகுதியிலிருந்து பல மைல் தொலைவில் உள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய என்டோசல்பானை இந்தியா ஆண்டு தோறும் 8,500 டன்கள் உற்பத்தி செய்து வருகிறது. 4,000 டன்கள் உள்ளூர் பயன்பட்டிற்கு 4,500 டன்கள் ஏற்றுமதிக்கு!

கேரளாவில் காசர்கோட் பகுதியில் முந்திரித் தோட்டங்களில் இருபது ஆண்டுகளாக என்டோசல்பான் வான்வழியாகத் தெளிக்கப்பட்டு வருகிறது. போபால் விஷ வாய்வுக் கசிவு அபாயத்திற்கு அடுத்த கட்டத்தில் இந்த என்டோசல்பான் நச்சுத் தன்மை வைக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு கேரளாவில் என்டோசல்பானால் உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 135 பேர்களின் குடும்பத்திற்கு அந்த மாநில அரசு தலா ரூ.50,000 கொடுத்துள்ளது.

இப்படியிருக்கையில் ரோட்டர்டாம், ஸ்டாக்ஹோம் மாநாடுகளில் என்டோசல்பான் விவகாரத்தைச் சேர்ப்பதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. காசர்கோட் விவகாரம் முதல் என்டோசல்பானின் கொடுமை பிரதமருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை.

கேரள அரசு 2010ஆம் ஆண்டு என்டோசல்பானைத் தடை செய்தது. தொடர்ந்து கர்நாடக அரசும் தற்காலிகமாகத் தடை செய்தது. ஆனால் நம் நாட்டு வேளாண் துறை அமைச்சர் ஷரத் பவார் என்டோசல்பானை நாடு முழுதும் தடை செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். சமூக சேவகியும், சுற்றுச்சூழல் நிபுணருமான வந்தனா ஷிவா, ஷரத் பவாரை ஒரு ஊழல் அமைச்சர் என்று சாடியதும் இதற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மக்களைப் பாதிக்கும் எந்த விவகாரங்களையும் நாம் கண்கொண்டு பார்க்கக்கூடாது, காது கொண்டு கேட்கககூடாது, அதனைப் பற்றி வாய்திறக்கக்கூடாது என்று, காந்தியின் நீதி போதனையை அறிவுறுத்தும் குரங்கு பொம்மையையே காந்தி வழி வந்ததாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி சிதைத்துள்ளது.

ஆயிரம் பொய்யைக் கூறி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் ஆனால் ‘வளர்ச்ச ி’ என்ற ஒரே கார்ப்பரேட் பொய்யைக் கூறி லட்சோப லட்ச மக்களை அழிக்கத் துணை போகிறது ‘நம் அரசு’.




என்றும் அன்புடன்,                                  Yours,

சந்திரமோகன்,                                        Chandramohan,

தமிழ்நாடு: 9952531858.                            Tamil Nadu: 9952531858.

ஹைதராபாத்: 8106375296.                      Hyderabad: 8106375296.

Follow

Get every new post delivered to your Inbox.